சென்னையில் மட்டும் 134 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை சென்னையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் 134 கர்ப்பிணிகள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எழும்பூரில் இருக்கும் தாய் சேய் நல மருத்துவமனையில் 64 கர்ப்பிணிகள் அங்கு சிகிச்சையில் இருந்தார்கள், அதில் 30 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் 34 கர்ப்பிணிகள் இருக்கிறார்கள். மவுண்ட் ரோடில் இருக்கக்கூடிய கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 55 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்ததில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
ராயபுரத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனையில் கொரோனா பாதித்த 84 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வந்ததில் 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47ஆக இருக்கின்றது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 30 கர்ப்பிணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தத்தில் சேனையில் மட்டும் 134 கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.