தமிழகத்தில் நடைபெற்று வந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முற்றிலும் நிறைவாடைந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்ததோடு மாவட்டம் முழுவதும் உள்ள எல்லைகளை மூட உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமுலாக்க இருக்கின்றது.
கொரோனா பரவலை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருந்து பொதுத் தேர்வுகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து 10 வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ஒத்திவைக்கப்ட்டன. +1 , +2 தேர்வையும் ஒத்திவைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று +1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு அரசு அறிவித்தது. 11ஆம் வகுப்பு ஒரே தேர்வே எஞ்சி இருந்த நிலையில் அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய +2 தேர்வு அனைத்தும் நிறைவடைந்தன. இதனால் மாணவர்களும் , பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.