புதுக்கோட்டை மாவடத்திலுள்ள விராலிமலை பகுதியில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்க்கொள்ள வெளி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அப்போது மதுரையில் ஆய்வுக் கூட்டத்தை முடித்து விட்டு காரில் புறப்பட்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட எல்லையான விராலிமலை தாலுகா லஞ்சமேட்டில் அவருக்கு அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க மாவட்ட செயலாளர் ஆகியோர் புத்தகம் வழங்கி அவருக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்தபடியே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் கலெக்டரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் விராலிமலை தாசில்தார் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.