Categories
மாநில செய்திகள்

மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இதையடுத்து ஜெய்கோபால் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று கைது செய்யப்பட்ட ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் மனுதாக்கல் செய்தனர்.அந்த மனு மீதான விசாரணை  இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு வந்தது. அப்போது பேனர் வைத்ததற்கும் ,எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை , எங்களின் கட்சிகாரர்கள் தான் பேனர் வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதற்க்கு நீதிபதி உங்கள் மீது குற்றம் இல்லை என்றால் நீங்கள் ஏன் தலைமறைவாக இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்க்கு ஜெயகோபால் தரப்பில் எனக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் என்னால் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியவில்லை என்று தெரிவித்தார். ஜெயகோபால் தரப்பு கருத்தை உள்வாங்கிய  நீதிபதி  கார்த்திகேயன் உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு வீட்டின் மகளை கொன்று விட்டீர்கள் என்று ஜாமீன் குறித்து போலீஸ் பதிலளிக்க கோரி உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Categories

Tech |