திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் என்ற வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்த 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் பால் மற்றும் மருந்துகள் கடைகளைத் தவிர்த்து மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சி கல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், மானூர் வனப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஊரல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காய்ச்சிய கள்ளச்சாராயம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.