Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஆஃபர் ….”ரூ. 20,000,00,00,000 ஒதுக்கீடு”….. மாஸ் காட்டிய கேரள முதல்வர்….!!

கேரளாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் திட்டம் அறிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. 12,426 பேருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 168 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை கொண்டுள்ள கேரளா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 20,000 கோடி அளவில் நிதி ஒதுக்கி திட்டங்களை அறிவித்துள்ளார். அதில் வறுமை ஒழிப்பு திட்டமான குடும்ப ஸ்ரீ மூலம் 2000 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கப்படும். வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இரண்டு மாதத்திற்கான நலத்திட்ட ஓய்வுதியத்தை இம்மாதமே வழங்க ஆணை இடப்பட்டுள்ளது.

மேலும் , நலத்திட்ட ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத குடும்பங்களுக்கு ரூபாய் 1000 உதவி அளிக்க 1,320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் வழங்க 100 கோடி ரூபாய்யும் , 20 ரூபாய் மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக 50 கோடி ரூபாயும், சுகாதாரத் திட்டத்திற்காக ரூ 500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நிலுவை தொகையை மாநில அரசு ஏப்ரல் மாதத்திற்குள் அடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோடாக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்களில் தளர்வு அளிக்கப்படும் என்றும் , திரையரங்குக்கு விதிக்கப்படும் பொழுதுபோக்கு வரி குறைக்கப்பட்டும் எனவும் , கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு வரி விளக்கு , மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தைச் செலுத்த கூடுதல் அவகாசம் உள்ளிட்ட அறிவிப்புகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |