கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராகுல் மற்றும் கார்த்திகா ஜோடிக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தங்களுடைய திருமண அழைப்பிதழில் ராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதில் எங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பிறகு பத்திரிக்கை மற்றும் கையால் எழுதப்பட்ட கடிதம் போன்றவற்றை இராணுவத்தினருக்கு கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினர் அனுப்பி தங்களுடைய திருமணத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன் பிறகு கையால் எழுதப்பட்ட கடிதத்தில் ராணுவத்தினர் நாட்டின் மீது கொண்டிருக்கும் உறுதியான அன்பு, உறுதிபாடு மற்றும் தேச பக்திக்கு நன்றி என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கார்த்திகா மற்றும் ராகுல் தம்பதியினருக்கு திருமணம் முடிந்த நிலையில், ராணுவத்தினர் இருவரையும் நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை பாங்கோடு ராணுவ நிலையத்தில் வைத்து ஸ்டேஷன் கமாண்டர் பிரிகேடியர் லலித் சர்மா மலர் கொத்து கொடுத்து புதுமண தம்பதிகளை வாழ்த்தி கௌரவித்தார். அதோடு ராணுவத்தினரின் சார்பாக புதுமண தம்பதிகளுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வுகளை ராணுவத்தினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
Pangode Military Stn Cdr felicitated the couple whose marriage invitation to Army made Pan India Social Media buzz.Shri Rahul&Mrs Kartika,both natives of Trivandrum got married on 10 Nov 22.They were invited to Pangode Military Stn & were welcomed at Army Camp with a bouquet(1/3) https://t.co/dRmXAeEwsY pic.twitter.com/1UOP1aKwED
— PRO Defence Trivandrum (@DefencePROTvm) November 21, 2022