தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தின் தெற்குப் பகுதி உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.