பிரான்ஸ் நாட்டில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சில மாவட்டங்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல நாடுகளை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா குறைய தொடங்கியது. எனவே மக்கள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கினர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கொரோனாவால் ஏற்படும் பலி எண்ணிக்கை குறைந்தது.
எனவே கடற்கரை மாவட்டங்களுக்கு வெளியே கட்டாய முகக்கவசம் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்டா வைரஸ் பரவல் தொடங்கியதால் நாட்டின் பல மாவட்டங்களில் மற்றும் முக்கிய கடற்கரைப் பகுதிகளிலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.