Categories
மாநில செய்திகள்

“தனித்து நின்றாலும் நாங்கள் தான் வெல்வோம்”… பாஜக தலைவர் நம்பிக்கை…!!

பாஜக தனித்து நின்றாலும் நிச்சயம் வெற்றி பெறும் என பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த எல்.முருகன்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, அதிமுக-பாஜக இடையே உள்ள உறவு சுமுகமாகவே இருக்கிறது என்றும், பாஜக தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறும் என நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் குற்றப்பின்னணி உடையவர்கள் பாஜகவில் இணைவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எல். முருகன், பாஜகவில் இணைய வரும் அனைவருமே மிஸ்டு கால் மூலமே கட்சியில் இணைவதால், அவர்களின் பின்னால் நடப்பது குறித்து ஆராய முடிவதில்லை என்றும், கட்சியில் சேர்ந்த பின்னர் ஏதேனும் அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிகழ்ச்சியின் போது அவர் தெளிவாக கூறியுள்ளார்.

Categories

Tech |