Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.டி.ஆர் எங்கு சென்றாலும் எதிர்ப்போம் – மதுரை மாவட்ட பாஜக அறிவிப்பு ..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், நான் சவால் விடுகின்றேன். இன்னைக்கு அவருடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ண சொல்லுங்க. அதே மாதிரி மத்திய தொகுதியில் அவர் போட்டியிடட்டும். அவரை எதிர்த்து பாஜக சார்பாக டாக்டர் சரவணன் தான், எங்க தலைவரிடம் அனுமதி வாங்கிட்டு, நான் போட்டியிடுறேன். அவர் வென்று காமிக்கட்டும்.

நான் சொல்கின்றேன்,  சவால் விடுடா இந்த அமைச்சருக்கு ? அமைச்சர்  வருத்தம் தெரிவிக்க வேண்டும்.  பத்திரிகைகளை நான் வர சொன்னதே இந்த விவகாரத்தை  திசை திருப்புகிறார். நமக்காக உயிர் கொடுத்த ஒரு ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை இந்த அளவுக்கு இவங்க எல்லாம் யார் இவர்களை விட்டது என்று கேட்டுள்ளார்.

அமைச்சரை பொறுப்பில் இருந்து மாண்புமிகு முதல்வர் எடுக்க வேண்டும்.  இந்த அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இவர் எந்த நிகழ்ச்சியில்  கலந்து கொண்டாலும், பாரதிய ஜனதா கட்சிக்காரன் ஒருத்தன் இருந்தாலும் அந்த இடத்துல அறவழியில்  எதிர்ப்பை காண்பிப்போம். உணர்வுள்ள எந்த தமிழரும், எந்த மதுரைகாரனும் நிச்சயமாக அவருக்கு எதிர்ப்பை எங்கு சென்றாலும், பதிவு செய்வான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |