கோவையில் செய்தியாளர்களை சந்தித்து ஜமாத் கூட்டமைப்பினர் பேசினர். அதில் கோவை மாவட்ட சுன்னத் சமாஜ் கூட்டத்தினுடைய பொதுச் செயலாளர் பேசும் போது, கோவை மாவட்ட நிர்வாக ஆட்சித் தலைவரும், காவல்துறை ஆணையாளர் அவர்களும் ஜமாத் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோவையில் கடந்த ஞாயிறு அன்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஒரு அசாதாரணமான சூழ்நிலை கோவையில் நிலவி வருவதை குறித்து ஜமாத் சார்பாக மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை நடத்தியதில் நடைபெற்ற சம்பவத்திற்கும்,
தீவிரவாதத்திற்கும் எந்த வகையிலும், எந்த ஜமாத்மார்களும் துணை போக மாட்டோம். அனைவரும் எதிர்கொண்டு தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை எந்த வழியில் வந்தாலும் எதிர்கொள்வோம் என்று பேசப்பட்டது. நடந்த சம்பவத்திற்கு ஜமாத்தின் கூட்டமைப்பின் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதில் சில ஜமாத்தார்களின் ஐயப்பாடுகளையும் நாங்கள் தெளிவு படுத்தி உள்ளோம்.
கோவையில் நடைபெறக்கூடிய அசாதாரணமான அரசியல் பதட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடந்த இந்த சம்பவத்தை பார்க்கும் பொழுது இந்த சம்பவப்பட்டு இருந்த முபின் என்ற நபராக இருக்கட்டும், அவரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபர்களாக இருக்கட்டும் கோவையில் எந்த ஜமாத்திலும், எந்த இயக்கத்திலும் அங்கம் வகிக்காத நபர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ மூளை சலவை செய்யப்பட்டு அமைப்புகளோடு செயல்பட்டு வருவதாக நாங்கள் அறிகிறோம். ஏற்கனவே இவர்கள் NIA உடைய சோதனை வளையத்தில் உள்ளவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.