கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து, மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின் தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை பறைசாற்றுவதன் மூலமாக, இந்த பந்திற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி வேண்டுகோள் வைக்கிறது.
எதிர்காலத்தில் திமுக தன்னுடைய தவறை உணர்ந்து, தீவிரவாதம் எந்த நோக்கில் இருந்து வந்தாலும், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கமாக இருக்க வேண்டும். கேரளத்தில் இல்லாத பயங்கரவாதம், இங்கே தமிழகத்தில் தலை தூக்குகிறது என்று சொன்னால், அதற்கு காரணம் திமுக அரசு தான், தமிழக முதல்வர் தான்.
பெட்ரோல் வெடிகுண்டு வீசிய போதே, கடுமையான நடவடிக்கை முடுக்கிவிட்டு எடுத்திருப்பார் என்று சொன்னால், நிச்சியமாக ஒரு பேராபத்தை அவர் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். அந்தப் பேராபத்து இன்றைக்கு ஏற்படாமல், ஒரு கார் வெடிகுண்டை மூலமாக உலகம் உணர்ந்து கொள்கின்ற வகையிலே சென்றிருக்கிறது.
இனியாவது அவர் விழித்துக் கொள்ள வேண்டும். ஆகவே நாங்கள் கோவை மாநகரத்திற்கு பெருமக்களை வேண்டுவது எல்லாம், நம்முடைய எதிர்ப்பையும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என்பதை பறைசாட்டுகின்ற வகையில் இந்த முழுமையான பந்திக்கு உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே பாஜக அறிவித்துள்ள பந்த் தேவையற்றது என திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்து விமர்சித்து வருகின்றனர்.