Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம்” முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை அரசியல் கட்சிகள் சந்திக்கின்றன.

Image

இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் , திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முழுமையான வெற்றியை பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது தான் வேலூர் மக்களவை தேர்தல். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு , தி.மு.க.வை குறி வைத்து வேலூர் மக்களவை தொகுதியில் அவதூறு பரப்பினால் அது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் தொற்று போல பரவி பாதிக்கும் என்ற  சதிதான் வேலூரின் மக்களவை தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்டது.

Image

தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை பொதுமக்கள் நன்றாக அறிவார்கள். வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களையெல்லாம் கடந்து தமிழ்நாட்டிலுள்ள 37 மக்களவை தொகுதிகளில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று,இந்திய துணை கண்டத்த தெற்கு நோக்கி திராவிட இயக்கத்தை திரும்பிப் பார்க்க வைத்தது நமது சாதனை.இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் இருக்கின்றார்கள். ஜனநாயக வழியில் நாம்  மாற்றிக்காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது.

Image

இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்துவோம். ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க கூட்டணியின் பேராதரவுடன் வேட்பாளராக கதிர் ஆனந்த் களம் காண்கிறார்.அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மை பணி. 37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர் என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |