Categories
உலக செய்திகள்

“எல்லைப் பிரச்சனை” நாங்கள் உதவுவோம்….. விருப்பம் தெரிவித்த அதிபர்…..!!

இந்தியா இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனையில் உதவ விரும்புவதாக அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக் கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் இரு நாடுகளுக்கிடையே இல்லை பிரச்சனை தொடர்ந்து வருகிறது. அதோடு சீன அரசு அத்துமீறல்களை மேற்கொண்டு வருவதால் இரு நாடுகளிடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி மாஸ்கோவில் சீனா மற்றும் இந்தியா என இரண்டு நாட்டு வெளியுறவு மந்திரிகளும் சந்தித்து பேசினர்.

அதன் பிறகு ஐந்து அம்ச சமரச திட்டத்தை அவர்கள் அறிவித்தனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு இரண்டு நாட்டு தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஆறாவது முறையாக நடந்தது. இதில் படைகளை எல்லையில் குவிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தபோது சீனா இந்தியா பிரச்சினை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், “இரண்டு நாடுகளும் சிரமங்களை சந்திக்கின்றன. அதுவும் மிகக் கடினமான சிரமங்கள் என எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் நிச்சயம் இந்த எல்லை விவகாரத்தை அவர்களால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அதோடு இந்த பிரச்சினையில் நாங்கள் உதவி செய்வதற்கு வாய்ப்பிருந்தால் உதவவே விரும்புகிறோம்” என கூறியுள்ளார். அதே நேரம் இந்தியா சீனா பிரச்சினை குறித்து அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை நிறுவனமான வால் ஸ்ட்ரீட் கருத்துக் கூறியுள்ளது.

அதில் “இந்தியாவை சமச்சீரற்ற பதிலை காணவே இந்த எல்லை மோதல் தூண்டி வருகிறது. அந்நாட்டின் கடற்படை வலிமையை பார்க்கும்போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. அதோடு அவர்கள் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளுடன் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கப்பல்களையும் தயாரித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இந்திய பெருங்கடலில் போக்குவரத்துகளை உன்னிப்பாய் கண்காணிக்க கடலோர கண்காணிப்பு நிலையங்களின் வலையமைப்பை தயார் செய்கின்றனர்” என தெரிவித்துள்ளது

Categories

Tech |