Categories
மாநில செய்திகள்

ரொக்கமாக ரூ.1,000 கொடுப்போம்: ரூ.2,000, கோடி தேவைப்படுது… தமிழக முதல்வர் ஆலோசனை…!!

வரும் ஜனவரி 15ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கடந்த முறை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக 21 பொருட்கள் கொடுத்தார்கள். அதில் சில விமர்சனங்களும் எழுந்தது. இந்த நிலையில தற்பொழுது பணமாக 1000 ரூபாய் கொடுக்கலாமா ? என்பது குறித்து முதலமைச்சர் கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கிறார்கள்.இதில் பொங்கலுக்கு எந்த மாதிரியான பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து  ஆலோசிக்கப்படுகின்றது.  கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் அவர்கள் நல்ல பயன் அடைவார்கள். கடலூர் போன்ற மாவட்டங்களில் விவசாயிகள் நிறைய பொங்கல் கரும்பு பயிர் இடுகிறார்கள். இது போன்று அரசு கரும்பு வாங்கும் போது அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்ததற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதே போல ஆயிரம் ரூபாய் இரண்டு 500 ரூபாய் தாள்களாக ரொக்கம் கொடுப்பதற்கும் ஏற்கனவே அரசு  திட்டமிடப்பட்டிருக்கிறது. 2 கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 2000 கோடி அரசுக்கு செலவாகும். இதுகுறித்து தற்போது முதலமைச்சர்  நிதித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு,  முதலமைச்சருடைய செயலாளர் ஐஏஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் சில பொருட்களும் மட்டும் ஆவினிலிருந்து வாங்கலாமா என ஆலோசிக்கப்படும் என தெரிகின்றது. நெய் மற்றும் சர்க்கரை… பச்சரிசி பொங்கல் செய்வதற்கு தேவையான ஒரு சில பொருட்களோடு, ஆயிரம் ரூபாய் பரிசு கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது குறித்த செய்தி குறிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று தெரிகிறது.

Categories

Tech |