பெரியார் சிலைகள் மீது காவி சாயம் பூசுவது பாஜகவின் நோக்கம் இல்லை என்றும், சில விஷ கிருமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக தலைவர்களைப் பொருத்தவரையில் வன்மம் அரசியல் செய்யாதவர்கள் எனவும் கூறினார். வருகிற தேர்தலில் தமிழகத்தில் அதிக ஓட்டு விழுக்காடு கொண்ட கட்சியாக பாஜக மாறப்போகிறது என அண்ணாமலை தெரிவித்தார்.
அதே போல எந்த ஒரு தலைவரும் அவமானப் படுத்துவது என்பது கட்சி கொள்கை கிடையாது. பாஜக கட்சி அந்த மாதிரி கிடையவே கிடையாது. நாம பார்த்தீங்கன்னா இப்போது ஈரோட்டில் பெரியாரின் மண்ணில் தான் இருக்கின்றோம்.
கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், அந்த மாதிரியான நாகரீகமான அரசியல் பண்ணனும்னு கிடையாது.யாரோ ஒருத்தர் பூசியிருக்கிறார் என்பதற்கு கட்சி காரணம் கட்சிதான் காரணம், கட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது சரியானதல்ல. பாஜக தலைவராக இருக்கட்டும், நிறைய தலைவர்கள் பார்த்தீர்கள் என்றால் யாரையும் திட்டுவது, வன்மம் அரசியல் செய்வதில்லை.
என்னைக்குமே அப்படி பண்ணினது கிடையாது. நிச்சயமாக நம்முடைய நோக்கம் அது கிடையாது. யாரோ விஷக்கிருமிகள் பண்ணுனதுக்கு கட்சி பொறுப்பல்ல. காவி என்று சொன்னாலே நிறைய இடத்துல ஒரு தப்பான கண்ணோட்டம் இருக்கிறது. ரொம்ப வருஷத்துக்கு முன்னால காவி என்பது ஒரு நார்மலான விஷயம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.