Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம்.. வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை: முதல்வர்

கோயம்பேடு சந்தையை முதலிலேயே வேறு இடத்திற்கு மாற்ற விரும்பினோம். ஆனால் அதற்குவியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ” ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக கோயம்பேடு திகழ்ந்து வருகிறது. சுமார் 20 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர்.

தமிழக அரசின் தீவிர முயற்சியால் கொரோனா தொற்று பரவல் தடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். மேலும், பல்வேறு இடங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு திரும்பியவர்களால் கொரோனா நோய் தொற்று அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை பெருநகரில் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். சென்னையில் தெருக்கள் பல இடங்களில் குறுகலாக உள்ளன.

எனவே பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளில் இருந்து படிப்படியாக வீடு திரும்புகின்றனர். மேலும், விவசாயிகளின் விளைபொருட்களை உரிய முறையில் விற்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விவசாயிகளின் விளைபொருட்களை விற்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Categories

Tech |