Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலத்தை இழந்தோம்… மொழியை இழந்தோம்… ஆட்சியை இழந்தோம்… இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை… இந்தி திணிப்புக்கு எதிராக வைரமுத்து ஆவேசம்…!!

ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து,  திருவானைக்கா என்று எங்களுக்கு ஊர் இருந்தது. அது எத்தனை நூற்றாண்டு வரலாறு கொண்ட ஊர் என்று அறிஞர்கள் பலருக்கு தெரியும்.  இவர்கள் வந்தார்கள்… திருவானைக்கா என்ற பெயரை ”ஜம்மு காஷ்மீரம்” என்று மாற்றினார்கள். திருமரைகாடு என்ற பெயரை வேதாரண்யம் என்று மாற்றினார்கள்.

வேதாரண்யம் என்றால் நேற்று வந்த ஊர் என்று பொருளாகிவிடும்.  வேதம் வந்த பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைந்த பிறகு வந்த பெயர்.  எங்களுக்கு திருமறைக்காடு என்று சொன்னால், அந்த ஊரின் வயது தெரிகிறது, வரலாறு தருகிறது, பண்பாடு தெரிகிறது, மொழி தெரிகிறது, அந்த ஊரின் பூர்வீகம் தெரிகிறது. 450 கோடி ஆண்டு ஆயிடுச்சு இந்த பூமி பிறந்து.

இந்த 450 கோடி ஆண்டுகளில் அந்த ஊருக்கு அந்த வயது இருக்கிறது. நீங்களும், நாங்களும் பக்கத்து வீடு. உங்கள் பக்கத்து வீட்டில் ஹிந்தி என்ற மரம் வளர்க்கிறீர்கள், வளர்த்துக் கொண்டு போங்கள். அதில் இலையும், பிஞ்சும், பூவும், கனியும், குலுங்கட்டும். வளர்த்துக் கொண்டு போங்கள். ஆனால் இந்தி மரம் வளர்க்கிறோம் என்ற சாக்கில், அதற்கு அதிகம் உரமிட்டு, உங்கள் வேரை, எங்கள் சுற்றுச்சுவரை கிளப்புமாறு பார்த்துக் கொள்ளாதீர்.

எங்கள் சுற்றுச்சூரை வீழ்த்துமாறு உங்கள் மரம் எங்களை ஊறு  செய்யாமல் இருக்கட்டும். எனக்கு எதிர் தாக்குதல் என்பதை விட, தற்காப்பு தான் எங்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. இது தமிழை காப்பதற்கான உரை.  தமிழை காப்பதற்கான ஒரு கூட்டம். இலக்க தயாராக இல்லாத கூட்டம். நாங்கள் இழந்தது போதும். எங்கள் நிலத்தை இழந்தோம், மொழியை இழந்தோம்,  ஆட்சி இழந்து இருக்கிறோம், இனிமேல் இழப்பதற்கு எங்களுக்கு எதுவும் இல்லை என பேசினார்.

Categories

Tech |