பிரபல நடிகை அனுஷ்கா கொரோனா குறித்த அறிவுரைகளை கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடு விதிமுறைகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் பல திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் கொரோனா சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வீடியோ மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஷ்கா கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “இந்த இக்கட்டான சூழலில் நாம் ஒருவருக்கொருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். தயவுசெய்து வழிகாட்டு முறைகளை கடைபிடியுங்கள்.
சுய ஊரடங்கை கடைபிடிப்போம். வீட்டிலேயே இருங்கள். சில மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். குறிப்பாக எதிர்மறை எண்ணங்களை நினைத்துப் பார்க்காதீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து மனித குலத்தின் பலத்தை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.