Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விலையை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை எதிர்த்து கோஷங்கள்… நாம் தமிழர் கட்சியினர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றினால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களை விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோ தலைமை தங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் நாகூர்கனி முன்னிலை வகித்த நிலையில் தொகுதி தலைவர் மணிவண்ணன், செயலாளர் குமார், திருவாடானை தொகுதி பொருளாளர் ஜவகர், மாவட்ட நிர்வாகி குமரன் உள்பட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் தமிழகத்தை கொண்டுநாடு என்ற பெயரில் துண்டாக்க நினைக்கும் மத்திய அரசு இந்த எண்ணத்தை கைவிட வேண்டும் என கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |