Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இந்த திட்டதை கொண்டுவர வேண்டும்… பல்வேறு கோரிக்கைகள்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர்…!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நடித்துள்ள கொற்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகளுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு 20,000 ரூபாய் வழங்க வேண்டும், 2 ஆண்டாக நிறுத்தப்பட்ட அரசின் திருமண உதவித்தொகை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு முன்பதிவில்லா இலவச ரயில் பெட்டியை ரயிலுடன் இணைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து அனைத்து பொது நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் வீரசேகரன் தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் வேலவன், துணை செயலாளர் கோபி, ஒன்றிய பொருளாளர் பார்த்திபன், மற்றும் கிளை செயலாளர் உட்பட பல்வேறு நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கோஷங்களை எழுப்பியுள்ளார்.

Categories

Tech |