Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

50நாளாக போராடுறோம்…! இனிமேலும் பொறுக்க முடியாது… புதுவையிலும் களமிறங்கும் விவசாயிகள் …!!

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியை நடத்த விவசாய சங்கங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் திட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்த கட்டமாக குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளனர். இப்பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பேரணி ஆனது ஏஎஃப்டி மில் திடலில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருக்கிறது. இதனை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

Categories

Tech |