செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய அதிகாரிகள், முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி, எங்கே எல்லாம் மத்திய அரசு நமக்கு தேவையின் அடிப்படையில் பணம் கொடுக்க முயற்சி எடுக்கின்றார்களோ, அதிகப்படியான பணத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது நம்முடைய பெருமை. ஆனால் இது எதையுமே செய்யாமல் எவ்வளவு ப்ராஜெக்ட் கொடுத்தார்கள் ? அதையெல்லாம் பேசலாம்.
இந்த விஷயத்தை அரசியலாக விரும்பவில்லை. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு நிதியை வாங்கும் போது, தமிழ்நாடு அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்ற மனநிலையில் இருந்தால், எப்படி தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும் ?
இதில் முதலமைச்சர் அவர்கள் தனி கவனம் செலுத்தி இந்த பணத்தை கொண்டு வர வேண்டும். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறதோ, அது பாரதிய ஜனதா கட்சியினுடைய பொறுப்பு, நம்முடைய அமைச்சர்களுடைய பொறுப்பு, அதை சண்டை போட்டு தமிழகத்திற்கு வாங்கிக் கொண்டு வருவது எங்களுடைய பொறுப்பு, ஆனால் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டே அனுப்பாமல், எப்படி பணம் ஒதுக்கீடு செய்வார்கள் ? என விமர்சித்தார்.