செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குடிவாரி கணக்கெடுப்போடு நாங்கள் கூடுதலாக வைப்பது, மொழிவாரியான கணக்கெடுப்பு எடுங்கள். முதலில் தமிழர்கள் எத்தனை பேர் இருக்கிறோம் என்று தெரியவில்லை ? ஒருவர் ஆறு கோடி என்கிறார், ஒருவர் 7 கோடி என்கிறார், 8 கோடி என்கிறார்கள். வந்தவர்கள் எல்லாம் நாங்கள் தெருக்கோடில் நிற்கிறோம் என்கிறார்கள். உண்மையில் எங்கே நிற்கிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை. பிற மொழி வழி தேசிய இனங்கள் வாழுகின்ற மாநிலங்களில்….
இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் தமிழர்கள் நாங்கள் வாழுகிறோம். நிறைந்தே வாழுகிறோம். கர்நாடகாவில் மட்டும் 1 1/4 கோடி இருக்கின்றோம். அந்த மாநிலத்தில் தமிழர்கள் எங்களுக்கு என்ன முன்னுரிமை ? என்ன பிரதிநிதித்துவம் ? என்ன இட ஒதுக்கீடு ? அந்த மாநில மக்களுக்கு இங்கே கொடுக்கப்படும். அதுதான் சரியான சமூக நீதி.
ஒரு அடிப்படை கேள்வி நான் குரு நானக் பிறந்ததுக்கு விடுமுறை விட்டு இருக்கேன். நான் மாகாவீர் ஜெயந்திக்கு பொது விடுமுறை விட்டு இருக்கிறேன். எங்கள் மூதாதை உலக பொதுமறை தந்த வள்ளுவர் பெருமகனாருக்கு இதில் எந்த மாநிலத்திலயாவது விடுமுறை இருக்கிறதா ? நான் தெலுங்கு வருட பிறப்பி ஏகாதிக்கு, கனட வருடப்பிறப்பு உகாதிக்கு எல்லாம் நான் விடுமுறை கொடுத்திருக்கிறேன், பொது விடுமுறை.
ஆனால் என்னுடைய புத்தாண்டு ஒன்றிற்கு… உலகத்தில் மூத்த இனம். ஆதிக்குடி தமிழ் குடி, எண்ணில் இருந்து பிரிந்து போன கனடர், தெலுங்கர், மலையாளிகளுக்கெல்லாம் நான் விடுமுறை விடுகிறேன். ஆனால் என்னுடைய தமிழ் புத்தாண்டுக்கு எந்த மாநிலத்தில் விடுமுறை இருக்கிறது ? இது எந்த மாதிரியான சமூகநீதி. இது எப்படிப்பட்ட பிரதிநிதித்துவம் ? இதை எப்படி ஏற்பது ? இவ்வளவு காலம் ஆட்சி செய்கின்ற திராவிட மாடலா ஆட்சி, இதெல்லாம் கேட்டு பெற்று தராமல், இத்தனை நாள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் ? இது எப்படி இருக்கிறது என விமர்சித்தார்.