பூமியில் இருக்கும் சில வகை நுண்கிருமிகள் விண்ணிற்கு சென்றாலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பூமியில் பல வகை நுண்கிருமிகள் உலா வரும் நிலையில் அளியாத சிலவகை நுண்கிருமிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகை நுண்கிருமிகள் எங்கு கொண்டு சென்றாலும் அழிக்க முடியாத ஆற்றல் பெற்றவையாக உள்ளன. மேலும் செவ்வாய்க்கிரகம் வரை கொண்டு செல்லப்பட்டாலும் அழியாமல் நீடித்து இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில், கோனன் என்று அழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியா, அலுமினிய தகடுகள் மீது வைக்கப்பட்டு விண்வெளி ஆய்வு மையத்தின் வெளியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு வெளியே இருக்கும் கதிர்வீச்சு மற்றும் சூழ்நிலை இடர்பாடுகளை கடந்து அந்த பாக்டீரியா கிருமிகள் மூன்று வருடங்களாக அழியாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் காற்று, ஈரப்பதம் போன்றவை நிலையிலும், அமிலங்கள் போன்ற எதையும் சமாளித்து இந்த வகை பாக்டீரியாக்கள் அழியாமல் நீடித்து நிற்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதீத சக்தி வாய்ந்த கதிர்வீச்சையும் இவை வென்று விடுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.