கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் குறித்து எங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்றாங்க ? கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அதுல வந்து நாங்க தலையிட முடியாது. எங்களை பொருத்தவரை தோழமை தொடருது அவ்வளவு தான். அவங்க கலந்து கொள்கிறார்களா ?
இவங்க கலந்து கொள்கிறார்களா ? இவங்க இத பேசினார்களா ? அவங்க அத பேசினார்களா எங்களுக்கு அதைப்பற்றி கவலை இல்லை. எங்களுடைய தோழமையாக இருக்கிறாங்க. கட்சியின் சார்பாக எங்களின் கருத்தை எடுத்து வைக்கின்றோம். எங்களை பொறுத்தவரை கொரோனா காலத்தில் வேறு வழியில்லை… மாநிலத்தினுடைய வருவாய் போய்விட்டது…. அதுக்காக முதியவர் மாதம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வாங்குவதை கட் பண்ண முடியுமா ? முடியாத விஷயம்…
அதேபோல தாலிக்கு தங்கம் அதை கட் பண்ண முடியுமா ? அதேபோல அரசு ஊழியர்களுக்கு கமிஷனில் கொடுத்தபடி கொடுக்கம இருக்க முடியுமா ? இல்லனா சம்பளத்தில் பாதியை பிடித்தோமா சம்பளத்தை… யாருக்குமே எந்த குறையும் வைக்கல நாங்க… அப்படி ஒரு சிறந்த நிர்வாக நாங்க நடத்தினோம்.
ஆனா இன்னைக்கு ஒன்றரை லட்சம் அவங்க ஆட்சியில் வாங்கின கடனை எல்லாம் மறைச்சிட்டு, 2022இல் ஐந்தரை கோடி வர வேண்டியதை இப்போ உள்ள கடன் போல சொல்லி எவ்வளவு ஒரு தவறான கருத்து மக்கள் மத்தியில் சொல்லி இருக்காங்க. இந்த நிதியாண்டுக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி தான் வரும் என முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.