குக் வித் கோமாளி புகழ் நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள் நிஜ வாழ்க்கையில் அல்ல என்று தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது நகைச்சுவை திறமைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருபவர் புகழ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த ஏமாற்றமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள். நிஜ வாழ்க்கையில் அல்ல. ஒருநாள் எனக்கு இயக்குனர் ஷங்கர் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர்கள் என்னை கிண்டியில் இருக்கும் ஒரு இடத்திற்கு வரச் சொன்னார்கள். அதன்படி அங்கு சென்ற நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.
அதன்பின் அந்த நம்பருக்கு போன் செய்து பார்த்தால் சுவிட்ச் ஆஃப் என வந்திருந்தது. அப்பொழுதுதான் தெரிந்தது இயக்குனர் ஷங்கர் பெயரை சொல்லி யாரோ என்னை ஏமாற்றி உள்ளார்கள் என்று உருக்கமாகக் கூறினார்.