Categories
மாநில செய்திகள்

“நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது.

இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்வியல் திறன், கட்டிடக்கலை, தோட்டக்கலை, தையல், இசை, ஓவியம், உடற்கல்வி மற்றும் கணினி போன்ற பாடங்களை நடத்துவதற்கு பணி அமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் முதலில் 5000 சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 10 வருடங்களில் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த 10000 ரூபாய் சம்பளத்தில் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு கஷ்டப்படுவதுடன், விலைவாசி உயர்வினால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் சிரமப்படுகின்றனர். எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போன்று பணி நிரந்தரம் செய்து உத்தரவு இட வேண்டும் என  ஆசிரியர்கள் சார்பாக கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |