Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள்  தயாரா ? என்று சவால் விடுத்தார்.

akhilesh yadav க்கான பட முடிவு

இந்நிலையில் அமித்ஷாவின் சவாலுக்கு பதில் அளித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக விவாதம் நடத்த தயார் என்றும் , ஆனால் நாட்டின் பொருளாதார மந்தநிலையை , வேலைவாய்ப்பு இன்மை , வறுமை உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதம் நடத்த பாஜக தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

mayawati க்கான பட முடிவு

இதேபோல் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும் , பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில் , மத்திய அரசு விடுத்துள்ள சவாலை தங்கள் கட்சி ஏற்பதாகவும் குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் , இவை குறித்து எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நேரடி விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |