திடிரென கூடுவது குறைவதற்கான காரணம் குறித்தும், கட்டுப்படுத்தப்ப பகுதிகளில் உள்ள செயல்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவினை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் 85 லட்சம் மக்கள் உள்ளதால் சவாலாக உள்ளது என தெரிவித்த அவர் சென்னையில் நோய்த்தொற்று உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஆயுஷ் மருத்துவர்கள் நேரிடையாக சென்னைக்கு வந்து அவர்கள் கண்காணிப்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் உள்ள அனைத்து கட்டுப்பாடு பகுதியில் உள்ள மக்களும் தொடர்ந்து வழக்கப்படும்.
கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா தடுப்பு பணியில் பொதுமக்களின் பங்களிப்பானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார். கொரோனோவை கட்டுப்படுத்தும் பணிகள் ஒரு புறமும், பரிசோதனை நடத்தும் பணிகள் மறுபுறமும் நடந்து வருகிறது அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மிகக் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் இருந்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தமிழக எல்லைக்குள் வரும் போதே பரிசோதனை செய்து தான் அனுமதிக்கப்படுகிறார்கள் என தகவல் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஆட்சியர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என பாராட்டு தெரிவித்துள்ளார்.