காலில் அடிபட்டு ரத்தம் வந்த பிறகு சென்னை ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு ஷேன் வாட்சன் உருக்கத்துடன் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் பரபரப்பாக நடந்த மும்பைக்கு எதிரான இறுதிப்போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் கால் முட்டியில் அடிபட்டு ரத்தம் வழிந்தும் விளையாடியது தெரிந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஷேன் வாட்சனை வலைத்தளங்களில் பாராட்டி தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். சென்னை ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து போன ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், மும்பை அணியிடம் நூலிழையில் கோப்பையை பறிகொடுத்தாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்கி இன்னும் சிறப்பாக விளையாட காத்திருப்பதாகவும் சேன் வாட்சன் கூறியுள்ளார்.
https://www.instagram.com/p/Bxg2_a5Ayed/?utm_source=ig_web_button_share_sheet