காவிரிக்கு இரு ஆறுகளில் இருந்தும் 5,000க்கும் மேலான கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்துவரும் காரணத்தால் சில அணைகளில் நீர் மட்ட அளவு என்பது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், கர்நாடக மாநிலத்தில் ஓடும் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்திருப்பதால் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 9,029 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் அந்த அணையில் இருந்து 4,114 கன அடி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கபினி அணைக்கு நீர்வரத்து என்பது 2,900 கன அடியாக உள்ளது. மேலும் அணையில் உள்ள தண்ணீரில் இருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தற்போது இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 5,614 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.