‘ஜெய்பீம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனிடையே சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இந்த படத்தில் வக்கீலாக நடித்த அசத்தலான நடிப்பை சூர்யா கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கலாம் என படக்குழு ஆலோசித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இறுதியாக சூர்யாவை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தபின் இந்த படத்தில் சூர்யா நடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.