கன்னி ராசி அன்பர்களே….!! உங்கள் மனதில் ஆன்மிக நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உருவாகும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாமன் மைத்துனர் களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். சுகமான நித்திரை அமைந்து இனிய கனவு வரும். இன்று குடும்ப பிரச்சினைகள் அனைத்துமே தீரும். ஒருமுறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை கொடுக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆனால் வீண் செலவும் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். அது போதும் அது போலவே சொத்துக்கள் வாங்குவது , விற்பது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். பயணங்களின் போதும் , வாகனத்தில் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முடிக்க வேண்டிய காரியங்களை செவ்வனே செய்வீர்கள்.இன்று அரசாங்கம் சார்ந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். அது போலவே மாணவர்கள் கல்வியில் நாட்டம் செல்லும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வெங்குவீர்கள்.இன்று சமூகத்தில் நல்ல மதிப்பையும் செல்வாக்கையும் நீங்கள் பெறக்கூடும். அதேபோல மற்றவர்களுக்கும் உதவி செய்து மனம் மகிழ்வீர்கள்.
கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது வெள்ளை நிற ஆடையோ அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்