பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தவில்லையெனில் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
பிரிட்டனில் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது அவர் தன் வீட்டில் தனிமையில் இருந்தவாறு பத்திரிகையாளர்களை நேரலையில் சந்தித்தார். அப்போது நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும்.
முக்கியமாக இளைஞர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத இளைஞர்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் கூடும் பகுதிகளில் தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டாயமாக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.