Categories
உலக செய்திகள்

தொலைபேசியில் புடினுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் பிரச்சனை குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, நேற்று அமெரிக்க அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் ஒரு மணி நேரமாக நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் பெரிய துயரத்திற்கு வழிவகுப்பதோடு ரஷ்ய நாட்டையே சிறுமைப்படுத்தும் என்று கூறினார்.

அதேசமயத்தில், உக்ரைன் நாட்டின் மீது கட்டாயமாக போர் தொடுக்கும் பட்சத்தில், அதற்கு மிகப் பெரும் விலையை கொடுக்க நேரிடும் என்றும், ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் புடினுக்கு அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |