பிரிட்டன் மகாராணியார் மற்றும் அவரின் செல்லப் பிராணிகளான நாய்களுக்கு, ஓநாய்கள் மற்றும் கரடிகளால் ஆபத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்சரித்திருக்கிறார்.
பிரிட்டனின் மகாராணியார் பால்மோரல் என்ற எஸ்டேட்டில், தன் செல்லப்பிராணிகளோடு வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சரான Lord Marland, இனிமேல் அவர் செல்லப்பிராணிகளோடு, அந்த எஸ்டேட்டிற்கு சென்றால் ஓநாய்கள் மற்றும் கரடிகளால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
அதாவது, Chris Packham என்ற சுற்று சூழலியலாளர், பிரிட்டன் மகாராணியாருக்கு ஒரு மனு எழுதியிருக்கிறார். அதில், மகாராணியார், தன் எஸ்டேட்டிற்குள் வன விலங்குகளை அனுமதித்தால் தான் மீண்டும் கரடிகள் மற்றும் ஓநாய்களை நாங்கள் அங்கு காண முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் Lord Marland, நாடாளுமன்றத்தில் கூறியதாவது, Chris Packham-ன் திட்டம் அதிகமானோரை அதிர்ச்சியடைய செய்ததாக கூறியிருக்கிறார். மேலும், அவர் கூறுகையில், சிறிது கற்பனை செய்யுங்கள், அந்த எஸ்டேட்டுக்கு செல்லப்பிராணிகளோடு மகாராணியார் செல்லும் சமயத்தில், திடீரென்று அவரின் முன்பு ஒரு ஓநாய் அல்லது கரடி வந்து நிற்கிறது, எனில் நம்மால் என்ன செய்ய முடியும்? என்று கூறியிருக்கிறார்.