Categories
உலக செய்திகள்

WARNING: “5ஜி” யால இவ்ளோ தீமை இருக்கா…? அச்சம் தெரிவித்த அதிகாரிகள்….!!

அமெரிக்காவில் செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5ஜி தொழில்நுட்பத்தின் சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படும் என்று அதனை சார்ந்த அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பத்தை செல்போன் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விமான நிறுவன அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

அதாவது 5ஜி தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும் 5ஜி அலைக்கற்றையின் ஊடுருவல் விமானத்தின் அல்டிமீட்டர் போன்ற கருவிகளை பாதிப்படைய செய்வதால் அதனை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |