வார்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திக்குறிச்சி ஐக்கரவிளை பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிற்படுத்தப்பட்ட மாணவருக்கான அரசு விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோபர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது மது அருந்தி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்த கிறிஸ்டோபர் தனது மனைவியான மரியாவிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மரியா உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிறிஸ்டோபர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.