நிவர் புயல் நாளை மறுதினம் கரையை கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், கன மழை பெய்வதற்கு முன்பே விவசாயிகள் இரண்டு நாட்களுக்குள் உடனே பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண் துறை அறிவித்துள்ளது. நெல் வயல்களில் நீர் பாய்ச்சுவதை நிறுத்தி, பயிரிடப்பட்டிருந்த நிலத்தில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டும். பல மரங்கள் உள்ளிட்ட இதர மரங்களின் கிளைகளை வெட்டி, அதிக அளவு காற்று புகும் வகையில் கழித்திட வேண்டும். அதிகளவு இளநீர் குலைகள் இருப்பின், சிலவற்றை பறித்து, தென்னை மரங்களை அதிக எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.