பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது.
கிஃப்ட் அல்லது அன்பளிப்பு கொடுத்தல் என்பது மனித வாழ்க்கையோடு கலந்து விட்ட ஒன்று. கிஃப்ட் கொடுத்தல் என்பது ஒருவரின் அன்பை வெளிப்படுத்துதலுக்காகவோ அல்லது உதவுவதற்காகவோ கூட இருக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் கிப்ட் பொருள், பணம் என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பிறந்தநாள், திருமணம் என்று தொடங்கி அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கிப்ட் கொடுக்கும் வழக்கம் உள்ளது.
இந்த கிஃப்ட் கலாச்சாரம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டு வருகிறது. தற்போது சுப நிகழ்ச்சிகளில் காலங்கள் மாறியதால் கொண்டாட்டங்களும் மாறி புதிய வடிவத்திற்கு வந்து விட்டன. ஆனால், அந்த கொண்டாட்டங்களில் முக்கியமானதாக உள்ள கிஃப்ட்களுக்கும் புதிய வடிவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பளபளக்கும் பாலித்தீன் கவருக்குள் போட்டோ பிரின்ட் செய்யப்பட்ட குவளை அல்லது மின்னும் விளக்கு கொண்ட எதாவது ஒன்றை காலம் காலமாக கிப்ட் பொருளாக்கி வருகிறோம். இவற்றிலிருந்து மாறி புதுமையான பரிசுப் பொருட்கள் கொடுக்க சில யோசனைகளை,
செடிகளையும் கிப்ட் ஆக்கலாம்:
செடிகள், அதில் கலர்கலரான பூக்கள் என்ற இயற்கையான, ஆரோக்கியமான புதிய கிஃப்ட்டினை நண்பர்களுக்கு பரிசளிப்போம். இவை கொடுக்கும் உங்களை மற்றவர்களமிடமிருந்து தனித்து காட்டும். இந்த செடியை நண்பரின் ஜன்னல் பக்கத்தில் வைத்தாலே போதும். பச்சை இலைக்கு மேலே பல வண்ணங்கள் கண்ணைக்க கவரும். இதைவிட தனியாக ஒரு ரூம் ஸ்ப்ரே தேவையா என்ன?
பிரிண்டிங் துணிகள்:
நமது தோழனுக்கோ, தோழிக்கோ திருமணம் என்று வைத்துக் கொள்வோம். அவர்களுக்கு நல்ல ஆடையை பரிசளிக்க விரும்புவோம். ஆனால் சைஸ் தெரியாமல் வாங்கி வந்து பல்ப் வாங்குவோம். இதை தவிர்க்க நல்ல டிசைனில் எம்பராய்டிங் செய்யப்பட்ட ரெடிமேட் துணிகளை நண்பருக்கு பரிசளித்தால் நன்றாக இருக்கும். அவர்கள் வேண்டியதை தைத்துக் கொள்ளட்டும். இதுவும் மாறுபட்ட யோசனைதான்.

ஓவியப் புத்தகம்:
கையால் வரையப்பட்ட ஓவியத்தை பார்க்கும்போது நமக்குள் ஒரு உள்ளுணர்வு தோன்றி மனஅமைதியை தரும். இதையும் நண்பர்களுக்கு கிப்ட்டாக அளித்து அவர்கள் நலனில் பங்கேற்கலாம்.
