கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் குடில் அமைப்பதில் அனைவரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குடும்பத்தினருடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் குடிலை அலங்காரபடுத்துவதே ஒரு தனி சந்தோஷம் தான். ஆனால் சில சமயங்களில் வருடந்தோறும் ஒரே மாதிரியான குடிலை அலங்கரிப்பதற்கு கொஞ்சம் சலிப்பாக தான் இருக்கும். இது போன்ற நேரங்களில் விதவிதமாக செலவில்லாமல் குடில் வைப்பதற்கான சில ஐடியாக்களை நாம் இந்த பதிவில் காண்போம். சிம்பிளாகவும் அதேசமயம் இடம் மாற்றிக் கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும் என நினைத்தால் இந்த வகை குடில் ஏதுவாக இருக்கும். அதாவது உங்களிடம் பிளாஸ்டிக் செடி மற்றும் கொடி இருந்தால் இது போன்ற குடில்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் சிறிய இடத்தில் குட்டியாக குடில் வைக்க விரும்பினால் இதுபோன்று அலங்கரித்தால் அழகாக இருக்கும். மேலும் நிறைய அலங்காரங்களை செய்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வெறும் குடிசை, வைக்கோல் போன்ற பேப்பர் மற்றும் சிற்பங்களை மட்டும் வைத்து குடில் அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும். அதேபோல் மிக பிரம்மாண்டமாக அலங்காரம் செய்ய விருப்பமில்லை. ஆனால் குடில் செய்வதில் உங்களுடைய பங்களிப்பும் வேலைபாடும் அதிகமாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இந்த வகையான குடில் சரியானதாக இருக்கும். அதாவது சிற்பங்களை நீங்கள் களிமண் அல்லது கிளே கொண்டு தயாரித்துக் கொள்ளலாம். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் முழுவதுமாக உங்களின் பங்களிப்பை அளித்து செய்ததனால் திருப்திகரமானதாக உணர்வீர்கள்.