Categories
தேசிய செய்திகள்

மளிகை பொருட்கள், ஷாப்பிங் செய்வதில் செலவை குறைக்க வேண்டுமா….? பணத்தை சேமிக்க உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!!

பொதுவாக பணத்தை சேமிப்பது என்பது பலரது கனவாகவும் இருக்கும். இதனால் அநாவசியமான செலவுகளை குறைத்துக் கொண்டு எப்படி பணத்தை சேமிக்கலாம் என்று பலரும் யோசிப்பீர்கள். அந்த வகையில் தற்போது பணத்தை சேமிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். அதாவது குடும்பமாக வசித்தாலும், தனிநபராக இருந்தாலும் மளிகை பொருட்கள் வாங்குவது மற்றும் ஷாப்பிங் செய்வது என்பது அத்யாவசியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மளிகை பொருட்கள் வாங்குதல் மற்றும் ஷாப்பிங் செய்வதில் எப்படி செலவுகளை குறைக்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

அதற்கு முதலில் நீங்கள் பட்ஜெட் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு மாதத்திற்கு வேண்டிய பொருட்களை பட்ஜெட் போட்டு வைத்துக் கொண்டால், அதற்கு அடுத்த மாதங்களில் எதில் கூடுதலாக பணம் செலவானது என்பது தெரியவரும். இதனால் ஒரு குறிப்பிட்ட தொகையை மளிகை பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதற்கு ஒதுக்கி சிக்கனமாக செலவு செய்யலாம். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கக்கூடிய அத்தியாவசியமான பொருட்களின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொள்வதோடு, கெட்டுப் போகக்கூடிய மற்றும் கெட்டுப் போகாத பொருட்களின் பட்டியலையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதனையடுத்து மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பாக வாரத்தில் 5 நாட்களுக்கு என்ன உணவு சமைக்க வேண்டும் என்பதை முதலில் திட்டமிட்டு கொள்ள வேண்டும். ஏனெனில் என்ன உணவு சமைக்கப் போகிறோம் என்பதை திட்டமிட்டு மளிகை பொருட்கள் வாங்கி விட்டால் அடிக்கடி கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் வராது. நாம் ஷாப்பிங் செய்ய போகும்போது சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும்.

ஏனெனில் பசி மயக்கத்தில் அவசர அவசரமாக பொருட்களை வாங்கிடுவோம். அதன் பின் ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைத்துக்கொண்டு வீட்டிலேயே சமைக்க கற்றுக் கொண்டு சமைத்து சாப்பிட்டால் கண்டிப்பாக செலவானது குறையும். அதோடு நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மேற்கண்ட முறைகளை பின்பற்றினால்  மளிகை பொருட்கள் மற்றும் ஷாப்பிங் செய்வதில் ஏற்படும் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம்.

Categories

Tech |