Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற இளைஞர்…” தூக்கி வீசிவிட்டு நிற்காமல் சென்ற bolero car”… பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

சேலத்தில் பொலிரோ கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பவானியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொலிரோ கார் ஒன்று சேலம் நோக்கி வந்தது இந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது இந்த கார் மோதியது. இதில் அந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார். இதன் பின்னரும் அந்த கார் நிற்காமல் பாரத் ஸ்டேட் வங்கி அருகில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை மோதி விட்டு பின்னர் நின்றது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் அந்த காரை சுற்றி வளைத்து காரை ஓட்டி வந்த வெங்கடேசனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினார் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |