டெல்லியில் இருந்து உத்தரவு வரும் வரை காத்திருக்கின்றேன் என்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் குமாரசாமி கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக அறிவித்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அரசு அமையும் வரை குமாரசா காபந்து முதல்வராக தொடர வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இன்று கர்நாடக மாநில பாஜக_வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பின்னர் பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வந்த எடியூரப்பா செய்தியாளர்களிடம் கூறும் போது , சங்பரிவார் அமைப்பின் மூத்த தலைவர்களின் ஆசியை பெற வந்தேன். டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.