அதிமுகவில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே சட்ட போராட்டத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்யை தவிர்த்த தற்போதைய அதிமுகவில் இனிமேல் சசிகலா, ஓபிஎஸ், டி.வி தினகரன் யாரையும் சேர்க்க மாட்டேன் என்றெல்லாம் தெரிவித்து வந்த நிலையில், சசிகலா ஒரு பக்கம் அதிமுக கைப்பற்றேன் என்று பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தங்களை சந்திக்க வந்தால் சந்திப்பீர்களா என கேள்விக்கு, எல்லோரும் சந்திக்க வந்தாலும் சந்திப்பேன் என தெரிவித்தார். இது பொதுமக்களும், கழக உடன்பிறப்புகளும் முடிவு பண்ண வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.
அதே போல முன்னாள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களா ? என்ற கேள்விக்கு ”கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்கள்” என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி யாரையும் சேர்க்க மாட்டேன் என்று கூறுகிறார் என்ற கேள்விக்கு ”நீங்க பாக்கத்தானே போறீங்க” என தெரிவித்தார்.