Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுத்துக்கோங்க கொஞ்சம்…! ஜம்முன்னு அதிமுக ஆட்சி வரும்… ஹேப்பி ஆன மாஜி மினிஸ்டர் …!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,  திமுக யாரும் நிம்மதியாக இருக்க முடியாது. பரவாயில்ல இந்த கஷ்டத்தை  கொஞ்ச நேரம் தாங்கிக் கொள்ளுங்கள். இந்த சூரியன் கஷ்டத்தை கொஞ்ச நேரம்  தாங்கிக் கொள்ளுங்கள். உதயசூரியன் கஷ்டத்தை இன்னும் இரண்டு வருடம் தாங்கிக் கொள்ளுங்கள், அடுத்து அதிமுக ஆட்சி ஜம்முன்னு வரும். இரட்டை இல்லை ஆட்சி வரும். அப்பொழுது நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

வருத்தம் என்ன வென்றால் ? தாலிக்கு கொடுத்த தங்கத்தை நிறுத்தலாமா ?  அம்மா கொடுத்தாங்களே என இந்த அக்கா சொல்லுறாங்க. அம்மா இருந்த போது, நம்ம வீட்டுல ஒரு ஏழை பொண்ணுக்கு கல்யாணம் என்றால், வண்டி பிடித்து நேராக அம்மா கிட்ட போய் எங்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுங்க என கேட்டோமா ? அம்மாவாக மனது வைத்து, கோட்டையிலுள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…

ஏழை பெண்மணியின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட புரட்சி தலைவி  அம்மா அவர்கள்….  நம்ம வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் என்று சொன்னால்,  50 ஆயிரம் ரூபாய் பணத்தையும்,  அரை பவுன் நகையையும் கொடுத்தவர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்…  அதை நிப்பாட்டிடாங்க. நம்ம வீட்டுப் பிள்ளைக்கு லேப்டாப். மிட்டா மிராசு, ஜமீன்தார், மெட்ராஸில் இருக்கக்கூடிய…  சிங்கப்பூரில் இருக்கக்கூடியவர்கள் தான் லேப்டாப்  பார்க்க முடியும். நம்ம வீட்டு வாசலில் இருக்கக்கூடிய ஏழை குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அந்த திட்டம் இன்னிக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. இது நியாயமா ? என தெரிவித்தார்.

Categories

Tech |