Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம் இருக்கு…. தீவிர புயலாக மாறும் ”நிவர்”…. வெளியான முக்கிய அப்டேட் ….!!

அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயல் தீவிர புயலாக மாறும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்பொழுது ”நிவர்” புயல் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. தற்பொழுது அதன் நகரும் வேகம் குறைந்துள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெற கூடும்.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 27-ஆம் தேதி வரை மழை தொடரும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களிளும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |