தேனி அருகே வாடல் நோய் தாக்குதலால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரிய குளத்தை சுற்றியுள்ள வடுகப்பட்டி ஜெயமங்கலம் சில்வார்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நோய் தாக்குதலால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் நோயின் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.